உத்தர பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், புகுந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் டாக்டரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களின் இந்த திடுக்கிடும் செயலால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் விகாஸ், உடனடியாக அவசர வார்டுக்கு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது என நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே தெரிவித்துள்ளார்.
