“பேங்க் அக்கவுண்ட் வாடகைக்குக் குடுத்தா கமிஷன் கிடைக்குமா?”… ஒரே நாளில் 77 பேரைத் தூக்கிய சைபர் கிரைம்… பேரதிர்ச்சியில் தமிழகம்…!

By Swetha on ஆவணி 9, 2026

Spread the love

சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி வேட்டையில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டியும் கோடிக்கணக்கில் பணம் பறித்த ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 77 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்படும் பெரும் தொகை, சைபர் குற்றவாளிகளால் பல்வேறு ‘முல்’ வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுப் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்குத் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்து, கமிஷன் தொகையைப் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் கணக்கு உரிமையாளர்களையே காவல்துறை தற்போது குறிவைத்து நிழல் வேட்டை நடத்தியுள்ளது.

   

அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்களின் ஏமாற்றத்தைப் பயன்படுத்தி பண மோசடிக்குத் துணைபோகும் வங்கி கணக்கு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.