ஆகஸ்ட் 16-க்குள் இதை செய்யலனா சிலிண்டர் கட்?… எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க….!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் தங்களது eKYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. எரிவாயு உருளைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சமையல் எரிவாயு மானியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் தங்களின் சமையல் எரிவாயு முகவர் நிலையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைபேசி செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் வாயிலாக ஆன்லைனிலாே எளிய முறையில் இந்த eKYC பதிவை மேற்கொள்ளலாம். மேலும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்காங்கே சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் eKYC அப்டேட் செய்யத் தவறினால், எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவோ அல்லது இணைப்பு முற்றிலுமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இச்சேவையை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.