திடீர் திருப்பம்… ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்….. தமிழக அரசியலில் நுழையும் முக்கிய எம்பி…. பரபரப்பில் அறிவாலயம்…!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரவீன் சக்ரவர்த்தி, டெல்லி அரசியலிலிருந்து விலகி தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் தீவிர ஆதரவு பெற்ற இவர், மாநில அளவில் கவனம் செலுத்துவது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் முழு ஆதரவும் அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பொருளாதார நிபுணத்துவமும் நிர்வாகத் திறமையும் கொண்ட பிரவீன் சக்ரவர்த்தி தனது அமைச்சரவையில் இடம்பெற்றால் அது அரசுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கருதுவதாக தகவல்கள் கசிகின்றன. தற்போது தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் தரப்பில் இரு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய பிரவீன் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டு வருவதாகவும் அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.