திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில், வீட்டின் உள்ளே இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தீக்கிரையாகிப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் அரை மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் எந்தவித உயிரிழப்பும் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
