“மாமியாரின் கள்ளக்காதல்…. கண்டித்த மருமகன்”… ஜாமீனில் வந்து 10:30 மணிக்கு தட்டிய கதவு…. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… காத்திருந்த பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தன் மகள் பிரியங்காவுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் அருகில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்குச் சென்று வந்தபோது, விபத்தில் காயமடைந்த ஆனைமலையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே, பானுமதி தன் மகளுக்குத் திருமணம் முடித்து வைத்தநிலையில், பிரபாகரனுடனான பழக்கம் குறித்து அறிந்த மருமகன் அவரைக் கண்டித்துள்ளார்.

குடும்பத்தினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பானுமதி, பிரபாகரனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ஆனால், பிரபாகரன் தொடர்ச்சியாகப் போனில் பேசி அவரை வற்புறுத்தியதால், பானுமதி உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அதன்பின்னரும், கடந்த ஒரு வாரமாகப் பானுமதியை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் பானுமதி அவரது அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.

   

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், இரவு வேளையில் பானுமதியின் வீட்டிற்குச் சென்று, அவர் மீது அளிக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறும், பானுமதி பெயரில் புதிய ‘சிம் கார்டு’ வாங்கித் தருமாறும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரபாகரன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவரையும் கல்லால் தாக்கியுள்ளார்.

   

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், பானுமதியை ரத்த வெள்ளத்தில் கொலை செய்துவிட்டு அங்கே அமர்ந்திருந்த பிரபாகரனைக் கைது செய்தனர். காயமடைந்த மயில்சாமி சிகிச்சைக்காகவும், பானுமதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகவும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மயில்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பாலப்பம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.