“இபிஎஸ்ஸை தூக்க அமித்ஷா போட்ட மெகா ஸ்கெட்ச்”…. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் போட்ட ரகசிய பிளான்… டெல்லியில் கிடைத்த கிரீன் சிக்னல்….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டமன்றத்திற்குள் ‘போட்டி அதிமுக’வை உருவாக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அப்புறப்படுத்த பாஜகவின் ஆதரவைக் கோரிய இந்தத் தரப்பு, தவெக பக்கம் சாயவும் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்தபோது, “இப்போதைக்கு தவெகவில் இணைய வேண்டாம்; சட்டமன்றத்தில் போட்டி அதிமுகவை உருவாக்க முயலுங்கள்” என அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறைக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பட்ஜெட் விவாதத்திற்கு முன்பாகவே சபாநாயகர் ஜேசிடி பிரபாகரையும் எஸ்பி வேலுமணி தரப்பு சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

   

சட்டமன்றப் பட்ஜெட் விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனியாகப் பேச வாய்ப்பு அளிக்கப்படுவது போல, தங்களுக்கும் தனிக்குழுவாகப் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இந்தச் சந்திப்புகளின் முதன்மை நோக்கமாகும். தங்களைச் சட்டசபைக்குள் தனித் தரப்பாகக் காண்பித்து, போட்டி அதிமுகவை முறைப்படி அங்கீகரிக்க வைக்கும் முயற்சியாகவே இந்த காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன.

   

ஆனால், இந்தச் சந்திப்புகளின் போது அமைச்சர் ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகிய இருவருமே “இது தொடர்பாக முதல்வர் விஜய்யிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் பதில் சொல்கிறோம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. தவெக தரப்பில் உடனடியாக எந்த நேர்மறை பதிலும் கிடைக்காததால் எஸ்பி வேலுமணி தரப்பு பெரும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எடப்பாடியை முடக்குவதற்கு அவர்கள் வகுக்கப்போகும் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.