விசிகவுக்கு ஆப்பு வைக்க மறைமுக திட்டம்?… யூடியூபர்களை ஏவி விடும் திமுக?…. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தவெகவுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் பங்குகோரியபோது, மற்ற தோழமைக் கட்சிகளை விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மட்டுமே திமுக திட்டமிட்டு இலக்கு வைத்து விமர்சித்ததாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைத் தூக்கி விசிகவை பலவீனப்படுத்தவும், கட்சி சாராத யூடியூபர்கள் மூலம் தொடர் விமர்சனங்களை முன்வைக்கவும் மறைமுக முயற்சிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டினார். சமரசமற்ற தனித்துவத்தோடும் வலிமையோடும் இயங்கும் தனது தலைமையை நீர்த்துப்போகச் செய்து, விசிகவின் வளர்ச்சியைத் தடுப்பதே இந்த அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பின்னால் இருக்கும் முதன்மை வேலைத் திட்டம் என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.