BREAKING: ரூ.4,000 ஊக்கத்தொகை…. விவசாயிகளுக்கு ஜாக்பாட்…. பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

விவசாயத் துறையை மேம்படுத்தும் வகையில், உயிர்ம (இயற்கை) உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க 20 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனுடன், மண்வளத்தைப் பாதுகாத்து விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை உயர்த்த ரூ.122 கோடி செலவில் சிறப்பு ‘மண்வளப் பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், உழவர்களின் சுமையைக் குறைத்து வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன், விவசாயிகளுக்குத் தடையில்லா இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.