பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டிஏவி கல்லூரி அருகே துயரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயன்ற நபர் ஒருவர், அதிவேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, விபத்துக்குள்ளான நபர் தண்டவாளத்தைக் கடக்கும் போது தனது மொபைல் போனில் தீவிரமாகப் பேசிக் கொண்டு சென்றிப்பது தெரியவந்துள்ளது. போனில் கவனம் செலுத்தியதால், எதிரே அதிவேகமாக வந்த ரயிலின் சப்தத்தையோ அல்லது சிக்னலையோ அவர் கவனிக்கத் தவறியதே இந்த கொடூர விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
https://twitter.com/nextminutenews7/status/2083492739191308290/video/1
ரயில் மோதிய பலத்த வேகத்தில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
