எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசாதீங்க…! விஜய் ஒரு சுயம்பு…! பின்புலம் எதுவுமில்லா தனிவழிப் பயணம்…. சவுக்கு சங்கரின் அதிரடி அரசியல் விமர்சனம்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து அரசியலுக்குள் தடம் பதித்துள்ள விஜய் அவர்களை, வழக்கமாகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசுவதை பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முற்றிலும் மறுத்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் காலடி எடுத்து வைத்த காலத்தில், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய திமுக என்ற இயக்கத்தின் பின்புலமும் தொண்டர்களின் பலமும் அவருக்கு இருந்தது. கட்சி அவருக்குக் கைகொடுத்தது போல, அவரது சினிமாப் புகழும் கட்சிக்கு உதவியது எனச் சவுக்கு சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், எந்தவொரு பாரம்பரியமிக்க அரசியல் இயக்கமோ, சித்தாந்த அமைப்போ அல்லது பெரிய தலைவர்களின் ஆதரவோ இன்றி களத்தில் இறங்கிய விஜய்யை அவர் ஒரு உண்மையான “சுயம்பு” என்று வர்ணிக்கிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், ஒற்றை ஆளாகத் தனது சொந்த மக்கள் செல்வாக்கையும் துணிச்சலையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு அவர் அடைந்துள்ள அரசியல் வளர்ச்சி ஒப்பற்றது. யாருடைய நிழலிலும் ஒதுங்காமல் சுயமாக உருவெடுத்துத் தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளார் எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.