யாரும் தொட முடியாது…. “விஜய் அரசுக்கு நாங்க தான் Sappers & Miners”… வைகோ ஓப்பனா சொன்ன ரகசியம்…. அதிர்ந்த அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருது பெற்றுப் பேசினார். இந்நிகழ்வில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வைகோவுக்கு விருதை வழங்கி சிறப்பித்தனர். விருது பெற்ற பின் மேடையில் ஆவேசமாகப் பேசிய வைகோ, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்கப் போர்க்களத்துச் சிப்பாய்களாகச் செயல்படும் என்றும், அவர்கள் ஒருபோதும் பாஜகவின் பக்கம் சாயமாட்டார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் உறுதியளித்தார்.

மேலும் பேசுகையில், “தவெக அரசுக்கு யார் தீங்கு விளைவிக்க நினைத்தாலும், அதைத் தடுக்கின்ற போர்வாளாகவும், பாதுகாப்பு கேடயமாகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிற்கும். நான் அனைத்துக் சவால்களையும் கடந்து வந்தவன், புதிதாகக் கஷ்டப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ராணுவம் போர்க்களத்திற்கு வரும்போது, முன்னே சென்று கன்னிவெடிகளை அகற்றும் ‘Sappers & Miners’ படையைப் போல, வரவிருக்கும் விஜய் அரசுக்கான அனைத்து தடைகளையும் அகற்றும் விசுவாசமிக்கப் படையாக மதிமுக செயல்படும்” என வைகோ எழுச்சிமிகு உரையாற்றினார்.

   

எதிர்க்கட்சிகளின் அரசியல் கணக்குகளை கடுமையாக விமரிசித்த அவர், “நீங்கள் என்னதான் முயற்சிகள் செய்தாலும் தவெகவை வீழ்த்த முடியாது; தப்பித்தவறி அப்படி ஒரு தேர்தல் சூழல் ஏற்பட்டால், தவெக கூட்டணி 180 இடங்களுக்குக் குறையாமல் பிரம்மாண்ட வெற்றி பெறும். எதிரிகள் படுதோல்வி அடைந்து, தங்களது அரசியல் அடையாளத்தையே இழந்து பூஜ்ஜியமாவார்கள். எனவே, வீண் பகல்கனவு காண்பதை நிறுத்துங்கள்” என்று எச்சரித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.