அண்ணாமலை கையில் எடுக்கும் புதிய அவதாரம்…. ஆகஸ்ட் 16-ல் சென்னையில் திரளப்போகும் கூட்டம்.. ‘We the leaders’ போட்ட மாஸ் ஸ்கெட்ச்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

சென்னையில் ‘We the leaders’ அமைப்பின் சார்பில் அண்ணாமலை தலைமையில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி வரவிருக்கும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறவுள்ளது. மக்கள் நல அரசியலைத் தனது அமைப்பு தீவிரமாக முன்னெடுக்கும் என அண்ணாமலை உறுதியளித்திருந்த நிலையில், சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘போதை இல்லா தமிழகம்’ பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, தற்பொழுது இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழுலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, தமிழக அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.