“அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவாய்”…. நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக MLA பகிரங்கக் கொலை மிரட்டல்…. உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க அரசைத் தீவிரமாக விமர்சித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு, கர்நாடக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் யஷ்பால் சுவர்ணா பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சி.ஜே.பி அமைப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய யஷ்பால் சுவர்ணா, நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ் ராஜ் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கண்டித்ததோடு, அவர் வரம்பு மீறிச் செயல்பட்டால் அரபிக்கடலில் உள்ள மீன்களுக்கு இரையாக மாறவேண்டி வரும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் இந்த சர்ச்சை பேச்சு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.