ஒரு லாரி ஓட்டுநர், தனது நீண்ட தூரப் பயணத்தின் போது வேலைகளில் தனக்கு உதவியாக இருக்க ஒரு புதிய உதவியாளரை வேலைக்கு அமர்த்தினார். பயணத்தின் இடையே, அந்த உதவியாளர் பொழுதைப் போக்குவதற்காக லாரி ஓட்டுநரிடம் கேம் விளையாட மொபைல் போனைத் தருமாறு கேட்டுள்ளார். ஓட்டுநரும் அவர் மீது வைத்த நம்பிக்கையால் யோசிக்காமல் தனது கைபேசியைக் கொடுத்துள்ளார்.
போனை வாங்கிய உதவியாளர், அதில் ‘பப்ஜி’ விளையாட்டைப் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்கியுள்ளார். விளையாட்டுப் பைத்தியத்தில் மூழ்கிய அவர், டிரைவருக்கு சற்றும் தெரியாமல் விளையாட்டிற்குள் இருக்கும் ‘UC’ போன்ற கூடுதல் அம்சங்களை வாங்கத் தொடங்கினார். இதற்காக, ஓட்டுநரின் மொபைலில் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கிலிருந்து படிப்படியாகச் சுமார் ரூ 47,000 வரை செலவழித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து, ஓட்டுநருக்கு அவரது வீட்டிலிருந்து அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பணத்தை அனுப்புவதற்காகத் தனது வங்கி கணக்கின் இருப்பைச் சரிபார்த்த ஓட்டுநருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. உழைத்துச் சேர்த்த கணக்கிலிருந்து ரூ 47,000 பணம் மாயமாய் மறைந்திருப்பதை அறிந்து அவர் நிலைகுலைந்து போனார்.
