“இன்றைய படங்களில் காதல் தெரியல; அதுதான் தெரியுது…” சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது எப்போது…? மனம் திறந்து பேசிய நடிகை ஜோதிகா…!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

ஜே.எஃப்.டபிள்யூ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவில் சமீபகாலமாக உண்மையான காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வரவில்லை எனக் வேதனை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்துப் பேசிய அவர், இருவரும் சேர்ந்து நடிக்க ஏற்ற நல்ல கதைகள் வரவில்லை என்றும், ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற அழகிய படைப்புகள் அரிதாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய படங்களில் உணர்வுப்பூர்வமான காதல் மறைந்து, வெறும் காமம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சூர்யாவும் தானும் மீண்டும் இணைந்து நடிக்க ஒரு பெண் இயக்குநர் இயக்கும் அழகான காதல் கதைக்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, தற்போது ஹிந்தித் திரைப்படங்களில் கவனம் செலுத்தி ‘சைத்தான்’, ‘ஸ்ரீகாந்த்’ போன்ற வெற்றப் படங்களைக் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமா குறித்து அவர் பேசிய இந்த நேர்மையான விமர்சனம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.