“அடேய்… உனக்கு மனசாட்சி இல்லையா…” காதலியை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற வாலிபர்… மனைவி எனப் பொய் சொல்லி தப்ப முயற்சி… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை, வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நில அளவையாளராகப் பணியாற்றி வரும் அந்த அரசு ஊழியர், பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுத்து பைக்கில் தப்ப முயன்ற போது, அப்பெண் வாகனத்தைப் பிடித்துத் தடுத்துள்ளார். இருப்பினும் வண்டியை நிறுத்தாமல் அவர் வேகமாக இயக்கியதால், அப்பெண் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுப் படுகாயமடைந்தார்.

இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தர்மஅடி கொடுத்தனர். அப்போது கூட்டத்திடமிருந்து தப்பிக்க அப்பெண் தன் மனைவி என்றும், இது குடும்பத் தகராறு என்றும் பொய்யான தகவலைக் கூறி நாடகமாடியுள்ளார். 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட காதலன் மீது அப்பெண் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளதை அடுத்து, வைரல் வீடியோவைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.