“சின்ன ரோலுக்குக்கூட அதை கேட்டாங்க…” அப்ளிக்கேஷன்லையும் இருக்கும்… விஜய் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் ரேஷ்மா, திரைத்துறையில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புத் தேடியபோது கூட, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியுமா என மேனேஜர்கள் எவ்வித அச்சமுமின்றி ஓபனாகவே கேட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். நடிகைகளின் விண்ணப்பப் படிவங்களிலேயே இத்தகைய கேள்விகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், இதற்குச் சம்மதிக்காததால் பல வாய்ப்புகளைத் தான் இழக்க நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்த காலகட்டத்தில், தனது தாயார் அளித்த பொருளாதார மற்றும் மனரீதியான ஆதரவால்தான் திரையுலகில் தொடர்ந்து பயணிக்க முடிந்ததாக ரேஷ்மா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பின்னர்க் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே வெப் சீரிஸ், குறும்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் கதவு திறந்ததாகத் தெரிவித்துள்ளார். இக்காணொளியைப் பார்த்த இணையவாசிகள், பெண்களுக்குத் துறைகளில் இத்தகைய அநீதிகள் நேரிடும்போது உடனடியாக வெளியே கூறிட வேண்டும், அப்போதுதான் மற்ற பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் எனத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.