“4 மாதப் போர்… திடீர் திருப்பம்”… ஈரானின் ‘கொசுப்படை’யை கையில் எடுக்கும் ரஷ்யா – அதிர்ச்சியில் வல்லரசுகள்…!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது போரைத் தொடங்கின. நான்கு மாதங்களாக நீடித்த கடும் மோதலுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல் வழியான ஹார்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த அமெரிக்கா மீண்டும் தன் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

   

இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஈரான் மீது அமெரிக்கா எந்தவிதமான புதிய தாக்குதலையும் நடத்தாமல் அமைதி காத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் அரங்கில் வலுத்துள்ளது. இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே, ஈரானின் அதிநவீன கொசுப்படை (Mosquito Fleet) என்ற கடற்படை கட்டமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

‘கொசுப்படை’ என்பது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய மிகச்சிறிய, ஆனால் அதிவேகத்தில் இயங்கும் படகுகளைக் கொண்ட ஒரு தனித்துவமான கடற்படைப் பிரிவாகும். பிரம்மாண்டமான போர்க்கப்பல்களைப் போல அல்லாமல், இந்தச் சிறிய படகுகள் எதிரி நாடுகளின் ரேடார் மற்றும் கண்களில் எளிதில் படாமல் மறைந்து செயல்படக்கூடியவை. கொசுக்கள் கூட்டமாக வந்து தாக்குவது போல, மிகவேகமாகப் பாய்ந்து சென்று எதிரிகளின் பெரிய கப்பல்களை நாலாபுறமிருந்தும் சூழ்ந்து தாக்கும் பேராற்றல் கொண்டவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

ஈரானின் இந்தத் தந்திரோபாயத்தைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின், “இது நவீனகால போர் தொழில்நுட்பத்திற்கும், தற்காப்பு உத்திகளுக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் இந்த வெற்றிப் பாதையைப் பின்பற்றி, ரஷ்ய கடற்படையும் அதிக ஆயுத பலம் கொண்ட சிறிய ரக அதிவேகப் படகுகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த ராணுவ உத்தி உலகப் போர் உத்திகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.