“பதவி வேணும்னா இத பண்ணுங்க”…. விஜய்யின் பனையூர் கொடுத்த புது கண்டிஷன்…. ஆடிப்போன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய முன்னாள் நிர்வாகிகளுக்கு இதுவரை கட்சிப் பதவிகள் எதுவும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பரவலான பேசுபொருளாகியுள்ளது. பதவிகள் குறித்து தலைமைப் பீடத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, “உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியாற்றுங்கள்; உங்களைப் பற்றி அவர்கள் அளிக்கும் நேர்மறையான பின்னூட்டங்களின் அடிப்படையிலேயே பதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என பனையூர் தலைமை திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி நிபந்தனையால் சற்றே கலக்கமடைந்துள்ள முன்னாள் முக்கியப் புள்ளிகள், தலைமையின் நம்பிக்கையைப் பெற வேறு வழியின்றி சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளில் விறுவிறுப்பாக இயங்கி, களப்பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.