காலையிலேயே குட் நியூஸ்… பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. மாணவர்களுக்கு ரூ.15,000.. இளைஞர்களுக்கு ரூ.4,000….. பட்ஜெட்டை அலறவிடும் 4 புதிய அறிவிப்புகள்…..!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

2026-27 நிதிநிலை அறிக்கையில் மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்களைக் கவரும் வகையில் நான்கு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட உள்ளதாகப் பிரபல தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ் 1 கிராம் தங்க மோதிரம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி, மற்றும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டிற்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை ஆகிய பிரம்மாண்ட நலத்திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.