மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 2020-ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரைச் சமீர் அலி என்ற வாலிபர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை மாற்றிப் போலி அரசு அடையாள அட்டை தயாரித்து, 2021-ல் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அவரைக் கட்டாயத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தச் சட்டவிரோத திருமணத்தின் மூலம் அப்பெண் தற்போது நான்கு வயதுக் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையை அணுகி, தான் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் குறித்துப் புகாரளித்துள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்தல், கட்டாய மதமாற்றச் சதி, கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
