‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உபகரணப் பைகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “மாற்று அரசியல் பேசுவோம்” என்று களமிறங்கிய தமிழக வெற்றிக் கழக அரசு, ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் திமுக மற்றும் அதிமுகவின் பாரம்பரிய பாணியிலேயே அரசு நலத்திட்டங்களைச் சுய விளம்பரத்திற்கான கருவிகளாக மாற்றத் தொடங்கிவிட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் நியாயம் இல்லாமல் இல்லை.
மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் விளம்பரப் பசியைத் தீர்ப்பதை விட, பயனாளிகளைச் சென்றடைவதையே முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும்; பைகளில் முகம் பொறிப்பதை விட, சேவையின் தரத்தில் தடம் பதிப்பதே ஒரு அரசுக்கு உண்மையான அடையாளத்தைத் தரும் என்பதை உணர்ந்து செயல்படுவதே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.
