BREAKING: சிவகாசி வெடி விபத்தில் 4 பேர் பலி.. 11 பேர் அதிரடி கைது…. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி மையத்தில் நேரிட்ட பயங்கர வெடி விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தொழிலாளர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து மற்றும் அய்யப்பராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டித்துரை என்பவரும் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கோரச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரைக் கைது செய்து சிறையிலடைத்ததுடன், அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஆபத்தான வெடிமருந்து மூலப்பொருள்களையும் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.