பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகளும், அப்பட்சியின் முன்னாள் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, தனது மகன் முகுந்தனுடன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியைச் சந்தித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து ஆலோசித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தனது 88-வது பிறந்தநாளில் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே பாமகவில் நிலவிய உள்மோதல்களுக்கு இடையே ராமதாஸால் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீகாந்தி, தற்போது தந்தை அரசியல் துறவறம் பூண்டுள்ள நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கித் திரும்பியுள்ளார். குறிப்பாக, என்.ஆர். காங்கிரஸை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தும் முயற்சியில் முதல்வர் ரங்கசாமி ஈடுபட்டுவரும் வேளையில், ஸ்ரீகாந்தியின் இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
