நெல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார், “சீமான் இம்மண்ணில் நிற்க வேண்டிய சூழல் உருவானாலும் உருவாகும். அது காலத்தின் கட்டாயம்” எனக் குறிப்பிட்ட பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமானதல்ல; தோல்வியைச் சந்தித்தவர்கள் மீண்டும் வெற்றி பெற மாட்டார்கள் என நினைக்கக் கூடாது” என்றும் அவர் உரையாற்றினார். பாஜகவைச் சேர்ந்த சரத்குமாரின் இந்த அதிரடிப் பேச்சு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே புதிய கூட்டணி உருவாகிறதா என்ற பலத்த அரசியல் கேள்வியையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
