“போடு அடிய… இளைஞைர்களை கவர ரீல்ஸ் போடுங்கள்… அமைச்சர்களுக்கு மோடியின் அதிரடி உத்தரவு… ஒரே நாளில் காட்டுத்தீயாய் பரவிய வீடியோ…!”

By Swetha on ஆடி 25, 2026

Spread the love

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களைக் கவர்வதற்காக அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களைப் பதிவிடுமாறு அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய ரீல்ஸ் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அது தொடர்பாகவே மோடியின் அந்த ரீல்ஸ் வீடியோ அமைந்திருந்தது. வினாத்தாள் கசிவு வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அந்த வீடியோ விளக்கியது.

   

இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீய போல வேகமாக பரவியது. இதனால் ஒரே நாளில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து 10.2 கோடியை எட்டியது.