நடிகர் விஜய்யுடன் திரையில் தோன்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவோடு திரையுலகிற்கு வந்த நடிகை ஆனந்தி அஜய், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகக் கூறி மிகுந்த வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தியேட்டருக்குச் சென்று திரையில் தன்னைக் காண ஆவலோடு காத்திருந்த நிலையில், காட்சிகள் கட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு தான் மிகுந்த துரதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
முன்னதாக ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்திலும் இவர் நடித்த காட்சிகள் இதேபோன்று படத்திலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு மீண்டும் ஒருமுறை கைநழுவிப் போனதால் மனமுடைந்த நிலையில் உள்ள அந்த நடிகையின் ஆதங்கப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
