“அவர் இறக்கவில்லை… உயிரோடுதான் இருக்கிறார்… தஞ்சையில் பழ. நெடுமாறன் கொடுத்த பிரம்மாண்ட ஷாக்…!!”

By Swetha on ஆடி 24, 2026

Spread the love

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், சினிமா பார்ப்பதில்லை என்பதால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து எந்தக் கருத்தும் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிச் செயல்பாடு மற்றும் அதன் போக்கைப் பற்றி மதிப்பீடு செய்து கருத்து தெரிவிப்பதற்கு இன்னும் அவகாசம் தேவை என்றும், ஓராண்டு கழித்து விமர்சிப்பதே சரியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார் என்ற தனது கூற்றை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், 2009-ஆம் ஆண்டு முதல் தாம் இதே கருத்தை உறுதியாகக் கூறி வருவதாகவும், உரிய நேரத்தில் இது வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.