தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…! சிறைக்கம்பிகளுக்கு பின் சுருண்டு விழுந்த அருணாச்சலம்…! நடந்தது என்ன…? திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் வேலை பார்த்து வந்த அருணாச்சலம் (29) என்ற இளைஞரை, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் விசாரணைக்காகப் பிடித்துச் சென்றனர். காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததால், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருணாச்சலத்தைச் சந்தித்த அவரது நண்பர்களிடம், 3 காவலர்கள் தன்னைத் தாக்கியதாக அவர் கூறியதாகச் சொல்லப்படும் நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, ஜூலை 17-ஆம் தேதி காவல் நிலையச் சிறைக் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்த அருணாச்சலம், திடீரென மயங்கி கீழே விழுவதும், அதைக் கண்டு காவலர்கள் ஓடிவருவதுமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.