“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் என். மேரி வில்சன் அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும் என்றும், பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட “வெற்றிப் பயணம் திட்டம்” என்ற மகளிருக்கான இலவச பேருந்து பயண வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து, முதல்வர் விஜய் கடந்த 16-ஆம் தேதி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் உட்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து போக்குவரத்து மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

   

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 அரசு போக்குவரத்து கழகங்களும் தங்களின் நிதித் தேவைகள் மற்றும் பேருந்துகள் குறித்த தனித்தனி அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், மகளிருக்கான இந்த முக்கிய வாக்குறுதி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என்ற பெரு எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அமைதியான முறையில் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.