ஹாலிவுட் பட லெவலில்… வாய்க்குள் ரூ 1.3 கோடி போலி வைரம்… 4.95 காரட் ஒரிஜினல் வைரத்தை அசால்ட்டாக ஆட்டையை போட்ட சூரத் கில்லாடிகள்… ஏர்போர்ட்டில் தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சைனாடவுன் பகுதியில் உள்ள உயர்தர நகைக்கடையில், சுமார் 1.54 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 1.3 கோடி) மதிப்புள்ள உயர்தர வைரத்தைத் திட்டமிட்டு திருட முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்ட இந்தியாவின் சூரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் குர்ஜிபாய் (41) மற்றும் செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகிய இருவரும் பல வாரங்களுக்கு முன்பே இத்திட்டத்தை வகுத்துள்ளனர். இந்தியாவில் இருந்தபோதே, தாம் திருட நினைத்த 4.95 காரட் வைரத்தின் அளவு, வடிவம் மற்றும் அடையாள விவரங்கள் அச்சுபிசகாமல் பொருந்துமாறு ஒரு போலி வைரத்தைத் தயாரித்துள்ளனர். பின்னர் சுற்றுலா அனுமதிச் சீட்டு மூலம் சிங்கப்பூர் வந்தடைந்து, இத்திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற முயன்றுள்ளனர்.

ஜூன் 19 அன்று ‘Dianoche’ என்ற நகைக்கடைக்குச் சென்ற இவர்கள், அங்குள்ள வைரத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். விற்பனை மேலாளரின் கவனத்தை ஒருவர் தந்திரமாக திசைதிருப்பிய வேளையில், மற்றொருவர் தன் வாய்க்குள் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த போலி வைரத்தை வெளியே எடுத்து உண்மையான வைரத்துடன் மாற்றி, அதைத் தன் வாயிலேயே மறைத்துக்கொண்டு அமைதியாகக் கடையை விட்டு வெளியேறியுள்ளனர். எனினும், சந்தேகமடைந்த கடை மேலாளர் நவீன பரிசோதனைக் கருவி மூலம் சோதித்தபோது அது போலி வைரம் என்பது உடனடியாக உறுதியானது. விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை, CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மாலை விமானத்தில் இந்தியா தப்பிச் செல்ல சாங்கி விமான நிலையத்தில் காத்திருந்தபோது மின்னல் வேகத்தில் கைது செய்து உண்மையான வைரத்தை மீட்டது.

   

மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சர்வதேச குற்ற வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மனோஜ்குமாருக்கு 2 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அதிநவீன CCTV வலையமைப்பு மற்றும் காவல்துறையின் துரிதமான செயல்பாட்டின் மூலம், குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன்பே கைது செய்யப்பட்டது