“மதுக்கடைக்குள் புகுந்த சிறுத்தை…” ஊழியரை பாய்ந்து கடித்து…! 5 மணி நேர போராட்டம்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, டோடாரைசிங் பகுதியிலுள்ள மதுக்கடைக்குள் திடீரெனப் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கடையின் விற்பனையாளரான சஞ்சய் குர்ஜார் என்பவரைக் கடுமையாகத் தாக்கிப் பொருட்களையும் சேதப்படுத்திய அந்த விலங்கு, கடையில் இருந்த மேலும் இருவரையும் காயப்படுத்தியது. காயம் அடைந்தபோதிலும் துணிச்சலாகச் செயல்பட்ட ஊழியர் சஞ்சய், கடையை விட்டு வெளியேறி உடனடியாக ஷட்டரை இறக்கிச் சிறுத்தையை உள்ளேயே பூட்டி வைத்தார். இவரது சமயோசித புத்தியால் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்குப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் ஜெய்ப்பூர் வனவிலங்கு மீட்புக் குழுவினர், கடையில் பூட்டப்பட்டிருந்த சிறுத்தையை சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்திப் பத்திரமாகக் பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்று நபர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுக்கடைக்குள் சிறுத்தை புகுந்து கூச்சலிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் நகைச்சுவையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.