“இது நல்ல ஸ்கூல் இல்ல அம்மா…” விடுதியில் தங்கி படித்த சிறுமி… திடீரென வந்த அழைப்பு…! குடும்பத்தையே நிலைகுலைய வைத்த அதிர்ச்சி சம்பவம்… கதறும் பெற்றோர்…!!

By Devi Ramu on ஆடி 21, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் – மகாலட்சுமி தம்பதியரின் மூத்த மகள், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார். பெற்றோர்கள் சென்னை கீழ்க்கட்டளையில் வசித்து வரும் சூழலில், அம்மாணவி பள்ளியின் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்துள்ளார். இச்சூழ்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை 6 மணி அளவில் தனது தாயை மொபைல் போனில் அழைத்து பேசிய அந்த மாணவி, அடுத்த சில நிமிடங்களிலேயே விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி நிர்வாகம் பெற்றோருக்கு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்ப முயன்றபோது, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆதரவோடு உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பாகச் சாலை மறியலில் ஈடுபட்டதால், காஞ்சிபுரம் – உத்தரமேரூர் வழியிலான போக்குவரத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP), பள்ளி மற்றும் விடுதி அறைகளில் தீவிர விசாரணை மேற்கொண்டார். “இது ஒரு மோசமான பள்ளி, ஏற்கனவே என் மகள் சில புகார்களை என்னிடம் கூறியும் நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்; என் மகளுக்கு நேர்ந்த இக்கதி வேறு எந்தக் குழந்தைகளுக்கும் வரக்கூடாது” என மாணவியின் தந்தை கண்ணீருடன் நீதி கேட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.