அடடே… உண்மையிலேயே ரூ.2500 தரப்போறாங்களா?… ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கப்போகும் அந்த அதிசயம்… பெண்களுக்கு ஜாக்பாட்… அரசு கொடுத்த அதிரடி அறிவிப்பு…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தி எப்போது வழங்கப்படும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதனால் வரவிருக்கும் இந்த பட்ஜெட்டில், உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் தமிழகப் பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.