CJP பேரணியில் களமிறங்கிய முக்கிய தலைவர்கள்… போலீஸ் போட்ட அதிரடி தடை… நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்… பாதுகாப்புப் படை வீரர்களின் தடியடி… அலறியடித்து ஓடிய கூட்டம்… பரபரப்பு சம்பவம்…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

டெல்லியில் உள்ள ஜாந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ‘காஃக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி புது தில்லியில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், போராட்டக்காரர்கள் தடைகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். இதையடுத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், கேந்திரிய வித்யாலயா மற்றும் சேவா தீர்த் ஆகிய ஐந்து முக்கிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவரும் எம்பியுமான சந்திரசேகர் ஆசாத், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சோனம் வாங்க்சுக்கின் மனைவி கீதாஞ்சலி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட எம்பி சந்திரசேகர் ஆசாத் பேசுகையில், “இந்திய இளைஞர்களின் வலியை நான் உணர்வதால், அவர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர்களின் குரலாக மாற இங்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார். இளைஞர்களின் உரிமைகளுக்காகவும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் குரல் எழுப்பவே இந்த ஜூலை 20 நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சிஜேபி (CJP) அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.