அதிர்ச்சி… தண்ணீருக்குள் போனதும் மாறும் இறக்கைகள்…! உலகை மிரள வைத்த விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு…! பின்னணி என்ன…?

By Swetha on ஆடி 20, 2026

Spread the love

அட்லாண்டிக் பஃபின் பறவைகளின் திறனால் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவின் எம்.ஐ.டி மற்றும் சுவிட்சர்லாந்தின் இ.பி.எஃப்.எல் விஞ்ஞானிகள் இணைந்து FAAV என்ற 300 கிராம் எடையுள்ள புதிய இருவாழ்வி ரோபோவை உருவாக்கியுள்ளனர். காற்றை விடத் தண்ணீர் 1,000 மடங்கு அதிக அடர்த்தி கொண்டது என்பதால் சாதாரண இறக்கைகள் தண்ணீருக்குள் உடைந்துவிடும். இதைத் தவிர்க்க, கார்பன் ஃபைபரால் பலப்படுத்தப்பட்ட ‘நெகிழ்வான சவ்வு’ இறக்கைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவை காற்றில் பறக்க ஸ்ட்ராங்காக இருப்பதுடன், தண்ணீருக்குள் நுழைந்ததும் நீரின் அழுத்தத்தால் 90 டிகிரி வரை தானாகவே வளைந்து மோட்டாரின் சுமையைக் குறைத்து இறக்கைகளைப் பாதுகாக்கின்றன.

ரோபோவுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கப் பாரமான ஹெவி பாக்ஸ் அமைப்பிற்குப் பதிலாக, நீர் தாராளமாகப் புகுந்து செல்லக்கூடிய ‘ஓப்பன் பாடி’ வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மோட்டார், பேட்டரி மற்றும் சென்சார்கள் சிலிகான் மூலம் வாட்டர்ப்ரூஃப் செய்யப்பட்டுள்ளதால், மிதப்பதைத் தவிர்க்கப் போராட வேண்டிய அவசியமின்றி பேட்டரி ஆற்றல் மிச்சமாகிறது. மேலும், எடையுள்ள ரோபோடிக் கால்கள் ஏதுமின்றி, ரோபோவை செங்குத்தாக 70 டிகிரி கோணத்தில் நிறுத்தி, நொடிக்கு 10 முறை இறக்கைகளை அடிக்க வைப்பதன் மூலம் வெறும் ‘ஒரே நொடியில்’ நீரிலிருந்து நேராக வானத்திற்குப் பாயும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் அமைத்துள்ளனர்.

   

நீரில் மூழ்கும் பறவைகள் தண்ணீருக்குள் இறக்கைகளைச் சுருக்குவது ஆற்றலைச் சேமிக்க அல்ல, மாறாக அசாத்திய வேகத்தில் நீந்துவதற்கும் வழிசெலுத்துவதற்கும் மட்டுமே என்பதை இந்த ரோபோ சோதனை மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். நொடிக்கு 6 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரோபோக்கள் மூலம் பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை எளிதில் ஆராய முடியும். மிக முக்கியமாக, இந்த வடிவமைப்பு ‘ஓப்பன் சோர்ஸ்’ ஆக வெளியிடப்பட்டுள்ளதால், வெறும் 300 மற்றும் ஒரு 3D பிரிண்டர் இருந்தால் யார் வேண்டுமானாலும் சொந்தமாக இத்தகைய வான்-கடல் ரோபோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.