“ஐயோ பாவம்…” பயங்கர வெள்ளத்தில் சிக்கிய பெண்… தன் உயிரை பொற்படுத்தாமல்… உதவிய வாலிபர்… இன்னும் மனிதநேயம் உயிரோடுதான் இருக்கு… நெகிழ வைக்கும் வீடியோ…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

வெள்ளம் சூழ்ந்த பிலாஸ்பூர் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சௌரப் பார்கவா என்ற இன்ஸ்டாகிராம் பயனர், சக மனிதரின் துயர் துடைத்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கனமழையினால் தேங்கியிருந்த வெள்ள நீரில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்துடன் சிக்கி, காலையும் நகர்த்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட சௌரப், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணிற்கு உதவ முன்வந்தார். எவ்வித பதற்றமும் இன்றி அந்தப் பெண்ணை அமைதிப்படுத்திய அவர், சிக்கியிருந்த அவரது காலை மிகவும் பத்திரமாக விடுவித்து, இருசக்கர வாகனத்தையும் பாதுகாப்பான இடத்திற்குத் தள்ளிச் சென்று நிறுத்தினார்.

https://www.instagram.com/p/Da4iFTLtaoW/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

   

மேலும், அந்தப் பெண்ணிற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அன்போடு விசாரித்து உறுதி செய்த பின்னரே சௌரப் அங்கிருந்து புறப்பட்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று நெட்டிசன்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். சௌரப்பின் இந்த மனிதநேயமிக்க, கனிவான செயலையும், இக்கட்டான சூழலில் அவர் கையாண்ட அமைதியான அணுகுமுறையையும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.