“என்ன வேணாலும் பண்ணுங்க… எனக்கு அது நடந்தே ஆகணும்”…அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கரூர் இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கரூர் இடைத்தேர்தலில் ‘வெற்றி’ என்ற ஒற்றை இலக்கை மட்டுமே மனதில் வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். மேலும், அதிமுக என்ற இயக்கத்தால் வளர்ந்து ஜாம்பவான்களாக உருவெடுத்தவர்கள், இன்று மாற்றுக் கட்சிக்குச் சென்று தங்கள் மதிப்பை இழந்து நிற்பதாக மறைமுகமாக எம்.ஆர். விஜயபாஸ்கரை சாடிய அவர், கட்சியை விட்டு வெளியேறியவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், அனைவரும் ஒற்றுமையுடன் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி துடிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.