தூக்கத்தில் வந்த பயங்கர கனவு… நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய 25 வயது பெண்… ஏரியில் சடலமாக மீட்பு… தாயார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

ஹைத்ராபாத் பீர்ஜாதிபுடா பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் தெருக்களில் ஓடி, பின்னர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் தேவுபள்ளி பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி (25) என்ற அந்த இளம்பெண், தனது தாய் அருணாவுடன் பீர்ஜாதிபுடா சங்கர் நகரில் வசித்து வந்தார். நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தனது தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, ஆடையின்றி தெருவில் ஓடியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, சிலையையும் அம்மன் புடவையையும் எடுத்துக்கொண்டு சென்ற அவர், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள ஏரியில் சடலமாக மிதந்துள்ளார்.

https://twitter.com/pulsenewsbreak/status/2078438701739487236/photo/1

   

இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த ஆறு மாதங்களாக தமக்கும் தனது மகளுக்கும் பயங்கரமான கெட்ட கனவுகள் வந்ததாகவும், அந்த கனவுகளில் தொடர்ந்து ரத்தம் தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரமான பின்னணி தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் மாந்தீரிக விவகாரங்கள் அல்லது மனநலப் பாதிப்புகள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேஜஸ்வினியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.