பழனி முருகன் கோவில் நிலத்தில் ரூ.100 கோடி மோசடி…. சிபி-சிஐடி போலீசாரின் அதிரடி வேட்டை…. நள்ளிரவு வரை நடந்த பரபரப்பு ரெய்டு….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு, தமிழக அரசுக்கு நாளுக்கு நாள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், சிபி-சிஐடி போலீசார் தங்களது விசாரணையை அதிரடியாகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பழனி சார்-பதிவாளர் அலுவலகம் மட்டுமன்றி, இந்த மோசடியில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சட்டவிரோதமாக நிலத்தை வாங்கிய சேதுபதி ஆகியோரின் ஒட்டன்சத்திரத்தில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேடாக நிலப் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றவும், இந்த பிரம்மாண்ட ஊழல் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கண்டறியவும் சிபி-சிஐடி போலீசார் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.