“பொதுமக்களுக்கு அடித்தது ஜாக்பாட்… தணிக்கைத் துறையில்… இந்த மேஜிக் நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கல… தமிழக அரசின் அதிரடி மூவ்…!!”

By Swetha on ஆடி 18, 2026

Spread the love

தணிக்கை நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் பணிச்சூழலை எளிதாக்கி, அவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தணிக்கை துறையின் செயல்பாடுகளை நவீனமயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தணிக்கை நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, துறை சார்ந்த சேவைகளின் தரம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் தங்களது குறைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ளவும், தங்களுக்குத் தேவையான விவரங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில், புதிதாக ‘பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம்’ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

   

இந்த புதிய இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை ஆன்லைன் வாயிலாக எளிய முறையில் பதிவு செய்ய முடியும். தணிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமர்ப்பிக்கும் மனுக்கள் மீது உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான தீர்வுகளையும் விரைவாக வழங்க இந்த தளம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, தணிக்கைத் துறையின் மீதான நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும்.