“நான் தான் ஓட்டேரி நரி பேசுறேன்”…. அமைச்சர் முன்னிலையிலேயே நடந்த கூத்து…. ஸ்கேன் ஸ்கிரீனில் ஓடிய ‘கில்லி’ படம்…. அதிர்ச்சியில் நோயாளிகள்….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் வரம்பு மீறி ‘ஆய்வு’ என்ற பெயரில் அத்துமீறுவது தொடர்கதையாகி வருகிறது. கட்சித் தலைமை இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று திட்டவட்டமாக எச்சரித்திருந்தாலும், களத்தில் இருக்கும் நிர்வாகிகள் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றனர். பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பகிர்ந்து வரும் போக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த சம்பவம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அருண் ராஜ் பங்கேற்று, புதிதாக வாங்கப்பட்ட ‘அதி அழுத்த பிராண வாயு’ சிகிச்சை மையத்தின் கருவிகளைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். அப்போது, நோயாளிகளின் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்ட வேண்டிய பிரதான ஸ்கிரீனுக்காக வைக்கப்பட்டிருந்த டிவியில், திடீரென நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் திரையிடப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

   

அதிநவீன மருத்துவ உபகரணங்களின் திரையில் இதுபோன்ற பொழுதுபோக்குத் திரைப்படங்களை ஓடவிட்டது நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தாலும், அரசு மருத்துவமனை போன்ற தீவிரமான இடங்களில், அதுவும் நோயாளிகளின் அறிக்கைகளைக் காட்ட வேண்டிய திரையில் கில்லி படத்தை ஓடவிடுவது எல்லாம் எந்த விதத்தில் நியாயம்?” என்று அங்கிருந்த நோயாளிகள் வேதனையுடனும் கோபத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

   

ஏற்கனவே கரூரில் விஜய் பேசிய வீடியோவை அரசுப் பள்ளியில் நேரலையாக ஒளிரப்பியதற்காகத் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் விஜய் படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு சர்ச்சை எழுந்தது. இப்படித் பொது இடங்களிலும், அரசு நிறுவனங்களிலும் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் இத்தகைய அத்துமீறல்கள் தொடர்வது அக்கட்சியின் தலைமைக்கே பெரும் அவப்பெயரையும் தர்மசங்கடத்தையும் உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.