மீண்டும் அட்டாக்…! “ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்…!” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை…!!

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரானது, அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் நீரிணையில் சென்ற சில கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால் ஒப்பந்தத்தை மீறிய ஈரானின் செயல்பாடு அமெரிக்காவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி மோதல் வெடிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

ஒப்பந்த மீறலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு போர் பதற்றமும், போர்ப் மேகங்களும் சூழ்ந்துள்ளன.

   

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனடியாகத் தங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்து ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், அடுத்த வாரம் ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்காகக் கொண்டு மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், நாளை இரவே அதன் தொடக்கமாக ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதல் பாயும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.