மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் மூத்த தலைவர்களின் தன்னிச்சையான பேச்சுகள், கட்சித் தலைமைக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வைகோவின் கருத்தைத் தொடர்ந்து, அண்மையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசிய கருத்துகள் மீண்டும் “குதிரை பேர” சர்ச்சையை விவாதப் பொருளாக்கியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தவெகவின் முக்கிய முகங்களாகப் பார்க்கப்படும் தலைவர்களே மேடைகளில் இவ்வாறு நிதானமின்றிப் பேசுவது, கட்சியின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னடைவாக அமைவதோடு, எதிர்காலத்தில் அமையவிருக்கும் தவெக அரசுக்குச் சட்டரீதியான நெருக்கடிகளை உருவாக்கக்கூடும் என முதலமைச்சர் விஜய் தனது ஆலோசகர்களிடம் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் உளறுவதைத் தவிர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தலைவர்களை அவர் நேரிடையாகவே கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
