“இனி ஸ்கூல்லயும் அம்மா கை சமையல் தான்”…. மாணவர்களுக்கு CM விஜய் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்… விரைவில் வெளியாகப்போகும் புதிய லிஸ்ட்….!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் உணவின் தரத்தை மேம்படுத்த முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு, மாணவர்களுக்குத் தங்களின் வீட்டு உணவு போன்றே மிகுந்த தரத்துடனும் சுவையுடனும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக, தற்போதைய உணவுப் பட்டியலில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளவும் அவர் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, சத்துணவுத் துறை அதிகாரிகள் புதிய உணவுப் பட்டியலைத் தயாரிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புதிய உணவுப் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.