விஜய் சொன்ன ‘அந்த’ ரூ.40 லஞ்சம் இப்ப ரூ.60 ஆயிடுச்சா?… டெல்டா விவசாயிகளின் பகீர் கிளம்பும் புகார்கள்… ஷாக் கொடுக்கும் தற்போதைய நிலவரம்…!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு 60 ரூபாய் வரை ஊழியர்கள் பகிரங்கமாக லஞ்சம் கேட்பதாக எழும் விவசாயிகளின் புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த திமுக ஆட்சி காலத்தில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது திருவாரூர் தேர்தல் பிரசாரத்தின்போது மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இந்த நிலை தொடர்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஊழலை வேரோடு ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரக் காட்டுவதாகக் கூறினாலும், விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டும் இந்த வெளிப்படையான லஞ்சப் போக்கு இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையே தற்போதைய கள நிலவரம் காட்டுகிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தற்போதைய நடைமுறைக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி, அரசு இயந்திரத்தில் இன்னும் நீடிக்கும் புரையோடிப்போன ஊழலை வெளிச்சம்போட்டுக் காட்டுவதுடன், தவெக அரசுக்கு மிக முக்கிய நிர்வாகச் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.