அடச்சீ நீ ஒரு அம்மாவா?… பெத்த மகனை இப்படியா?… சிகரெட் சூடு வைத்த தவெக வழக்கறிஞர்… போக்சோ கைது… 7 வயது சிறுவன் கொடுத்த நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்…!

By Visaka on ஆடி 14, 2026

Spread the love

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததோடு, அவரது 7 வயது சிறுவனுக்கு சிகரெட் சூடு வைத்து சித்திரவதை செய்த புகாரில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் என்.சிவகுரு மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. கடலூரைச் சேர்ந்த கப்பல் மாலுமியின் மனைவியான அந்தப் பெண்ணுடன், மாலுமி பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த 4 மாத இடைவெளியில் சிவகுரு பழகியுள்ளார். நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறிய நிலையில், அந்தப் பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளார்.

இந்த நிலையில், சிவகுருவும் அந்தப் பெண்ணும் தனிமையில் இருந்ததை அவரது 7 வயது மகன் நேரில் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும், தங்களின் உறவுக்கு இடையூறாக இருந்த சிறுவனை கொடூரமாகத் தாக்கியதோடு, சிகரெட்டால் உடம்பில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளனர். பணி முடிந்து வீடு திரும்பிய கப்பல் மாலுமி, தனது மகனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு விசாரித்தபோது இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கறிஞர் சிவகுரு மற்றும் மாலுமியின் மனைவி ஆகிய இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சிக்கு அவப்பெயர் விளைவித்ததாக சிவகுரு மீது தமிழக வெற்றி கழக தலைமை அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் சிவகுரு கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், நற்பெயருக்குக் கேடு விளைவித்ததாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் இவருடன் கட்சி ரீதியாக எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.