மத்திய அரசு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளுக்கான வட்டித் தொகையை நாளைக்குள் (ஜூலை 15) ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 34 கோடி பணியாளர்களின் PF கணக்குகளில் மொத்தம் ₹1.44 லட்சம் கோடி தொகை செலுத்தப்பட உள்ளது. வழக்கமாக வட்டி வரவு வைக்கப்படும் காலத்தை விட, இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே வட்டித் தொகை செலுத்தப்படுவது ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் ஒட்டுமொத்த PF தொகை மற்றும் அதற்கான வட்டி விவரங்களை மிக எளிதாக ஆன்லைனில் லாக்-இன் செய்து, தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றி உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளலாம்.
