லஞ்ச ஒழிப்புத்துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே, அதன் இயக்குநர் பதவியில் முதல்வர் விஜய் அதிரடி மாற்றத்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியபோதிலும், அந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இன்றி வேகம் காட்டப்படவில்லை என்றும், முந்தையமுன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையும் தொய்வடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்த முடக்கத்தை உடைத்து, கிடப்பில் உள்ள அனைத்து ஊழல் வழக்குகளின் விசாரணைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ள சூழலில், அதன் முதற்கட்டமாகவே இந்தத் தலைமை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
